2021-22 ஆம் ஆண்டில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிவித்தது.

அதன்படி அடுத்த ஒன்பது மாதங்களில் இந்திய அணி, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் ஒட்டுமொத்தமாக நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 14 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இவை 2021 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை நடைபெறும்.