எம்.எஸ்.தீன் 

 “முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் அஷ்ரப்பின்கொள்கைகளை மறந்து சமுக அரசியலைக்கைவிட்டு சுயலநல அரசியலை முன்னெடுப்பதும்ஒரு இன அழிப்பே”

முஸ்லிம்காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும்எச்.எம்.எம்.அஷ்ரப்பின்21ஆவது நினைவு தினம் கடந்த16ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. 

கொரோனாபரவல் மற்றும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளஊரடங்கு ஆகியவற்றால் வழக்கம் போன்ற ஏற்பாடுகள்இல்லாது விட்டாலும் ஒரு சில இடங்களில்மட்டுப்படுத்தப்பட்ட வகையில் அஷ்ரப்பின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

கடந்த21 வருடங்களாக அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வுகள்நடைபெற்றாலும், அவரின் கொள்கைகளைப் பற்றிகூறிக் கொண்டாலும் முஸ்லிம் காங்கிரஸினதும், அதிலிருந்து பிரிந்து முளைத்த மாற்று முஸ்லிம்கட்சிகளினதும் நடவடிக்கைகள் பெரும்பாலும் முஸ்லிம் சமூகம் சார்ந்ததாக அமையவில்லை. 

தற்போது வரையில் மக்களை ஏமாற்றும்யுக்தியையே இக்கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. 

அஷ்ரப்பின்மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின்யாப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அந்த மாற்றங்கள் தலைமைத்துவத்தின் தேவைக்காகவே செய்யப்பட்டுள்ளன. 

கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த ஆரம்பகால உறுப்பினர்கள்பலரும் கட்சியைப் பிரிந்து முரண்பட்டுள்ளார்கள். அவர்களின் தியாகங்கள் புறக்கணிக்கபட்டுள்ளன. 

அவர்களைஅவமானப்படுத்தும் நடவடிக்கைகள் கூட கட்சியின் உயர்பீடத்தினால்மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் ஒதுக்கப்பட்டு,அவர்களின் இடங்களில் அஷ்ரப்பின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.