பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட மீண்டும் பதவியேற்றுள்ளார்.

May be an image of one or more people, people standing and indoor

சபாநாயகர் முன்னிலையில் சற்று முன்னர் உறுதியுரை செய்து கொண்ட அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

May be an image of 1 person, standing and indoor

அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்காக ஜயந்த கெட்டகொட கடந்த ஜூலை மாதம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

கொழும்பு லும்பினி கல்லூரியின் பழைய மாணவரான ஜயந்த கெட்டகொட, கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகத்தின் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆவார்.

1991 இல் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடுவலை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அவர் 1999 மேல் மாகாண சபைக்கு தெரிவாகினார்.

2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான கெட்டகொட இன்றுடன் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை செய்துள்ளார்.