இலங்கையின் தேசிய கராத்தே அணியினை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய தலைமை பயிற்சியகம் விளையாட்டு துறை அமைச்சினால் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய , ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின்‌ தலைவர் எச்.எம்.சிசரகுமார, செயலாளர் கீர்த்தி குமார, உப தலைவர் நதித்த சொய்சா, பொருளாளர் கிரேஸ்மன், மேல் மாகாண தலைவர் நீல், இணைப்பாளர் தேஷாதி குரே ,தேசிய தெரிவுக்குழு உறுப்பினர் அன்ரோ டினேஸ், தேசிய அணி பயிற்றுனர் சாமிந்த ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தேசிய கராத்தே அணியின் பயிற்சிகளுக்கு புதிய தலைமையகம் அமையப்பெற்றமைக்கு ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனம் விளையாட்டுத் துறை அமைச்சிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளது.