இலங்கையில் இதுவரை சுமார் 25 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி அளவுகள் நிர்வாகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நேற்யை தினம் மாத்திரம் 59,187 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அஸ்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் 766 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 23,616 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சினாபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 27,873 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 5,895 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 51 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 26 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ்  889 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 71 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் 24,927,089 கொவிட்-19 தடுப்பூசி நிர்வாகிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன், 11,124,145 நபர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் நாடு முழுவதும் மொத்தம் 331 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளதுடன், இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும், மொபைல் தடுப்பூசி நிலையங்களும் சேவையில் உள்ளன.

21.09.2021 தடுப்பூசி நிலையங்கள்