ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அஸிசுல்லா ஃபாஸ்லி திங்களன்று நசீப் சத்ரான் கானை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளார்.

Image

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நசீப் கான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார் என்று அசிஸுல்லா ஃபாஸ்லி அறிவித்தார்.

நசீப் கான், முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன், கிரிக்கெட் தொடர்பிலும் தெளிவான பார்வை கொண்டவர்.

Image

தலிபான்கள் இறுதியாக இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது, பெண்கள் பாடசாலையில் சேர அனுமதிக்கப்படவில்லை மற்றும் பெண்களின் வேலை மற்றும் கல்விக்கும் தடை விதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் மகளிர் அணி 2010 இல் உருவாக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு பாதுகாப்பு கவலையின் மத்தியில் அமைதியாக கலைக்கப்பட்டது.

ஆனால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு பெண்கள் அணியை புதுப்பித்து 25 வீரர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியது.

எனினும் தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் வந்தமையினால் பெண்களுக்கான விளையாட்டுகளும் தடைசெய்யப்பட்டதுடன், கிரிக்கெட் தொடர்பிலும் கேள்விக் குறிகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.