“லொஹான் இதுவரை கைதுசெய்யப்படாமல் இருப்பதன் மூலம் நீதியான விசாரணை இடம்பெறுவது சந்தேகம்” 

Published By: Digital Desk 4

20 Sep, 2021 | 09:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் என்பதற்காக லொஹான் ரத்வத்தைக்கு விசேட வரப்பிரசாதங்கள் எதுவும் இல்லை. அவரை கைது செய்வதற்கு பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் நீதியான விசாரணை இடம்பெறும் என்பதில் சந்தேகம் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர் சட்டத்தரணி அதுல எஸ். ரணகல தெரிவித்தார்.

நான் குற்றவாளி என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் - உறுதியாக கூறுகிறார்  லொஹான் ரத்வத்த | Virakesari.lk

வெலிகடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்படாமல் இருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெலிகடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தவறு செய்திருப்பது வெளிப்பட்டிருக்கின்றது. லொஹான் ரத்வத்த தவறை ஏற்றுக்கொண்டே பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். அவரின் நடவடிக்கையில் தண்டனைச் சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கின்றன.

துப்பாக்கி பயன்படுத்தி இருப்பது தொடர்பில் தவறு இடம்பெற்றிருக்கின்றது. அதேபோன்று அரச ஊழியர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தி இருப்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று குடி போதையில் செயற்பட்டமை தொடர்பில் வேறு சட்டம் இருக்கின்றது. சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சட்டத்தையும் மீறி இருக்கின்றார். சாதாரண குற்றம் செய்த நபர்களையும் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துகின்றார்கள். ஆனால் பல சட்ட மீறல்களை மேற்கொண்ட இந்த நபரை கைதுசெய்வதற்கு பொலிஸால் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான விசாரணை நீதியாக இடம்பெறுவதாக இருந்தால், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவேண்டும்.

அவர் சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் என்பதற்காக அவருக்கு விசேட  வரப்பிரசாதங்கள் இல்லை. அவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று இருப்பதற்காக கண்டவர்களுக்கெல்லாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவோ பொது மக்களை அச்சுறுத்தவொ முடியாது. அனுமதி அளிக்கப்பட்ட துப்பாக்கிகள் மூலம் அதனை செய்ய முயடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02