இலங்கை - துருக்கிக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த  இணக்கம்

Published By: Digital Desk 4

20 Sep, 2021 | 09:50 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேசக்கட்டமைப்புக்களில் இலங்கை - துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் நியூயோர்க்கிற்குச் சென்றிருக்கும் நிலையில், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அங்குள்ள துருக்கி இல்லத்தில்வைத்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் சவுஷோலுவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது கடந்த 2016 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த இருநாள் விஜயம் தொடர்பில் நினைவுகூர்ந்த மெவ்லட் சவுஷோலு, விரைவில் துருக்கியில் இலங்கையின் துணைத்தூதுவர் ஒருவர் பதவியேற்கவுள்ளமை குறித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவதற்கும் இது சிறந்த தருணமாகும் என்று இரு அமைச்சர்களும் பரஸ்பரம் சுட்டிக்காட்டியதுடன் கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் துருக்கியினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை சார்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப்பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அது இவ்வாண்டில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் துருக்கிக்கான தேயிலை ஏற்றுமதியை விஸ்தரிக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், நிர்மாணம் மற்றும் மருந்துப்பொருள் உற்பத்தி ஆகியவற்றில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களின்போது துருக்கி நாட்டவர்கள் இருவர் மரணித்தமைக்கு இரங்கல் வெளியிட்ட பீரிஸ், தீவிரவாதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் விசாரணைகள் பற்றிய தகவல்களையும் எடுத்துரைத்தார்.

மனித உரிமைகளை சிலர் தமது தனிப்பட்ட நலன்களை அடைந்துகொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்துவது குறித்து இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேசக்கட்டமைப்புக்களில் இலங்கை - துருக்கி நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40