அதிருப்தியில் ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் : அவசரமாக ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம் - இது தான் காரணம் 

Published By: Digital Desk 4

20 Sep, 2021 | 09:06 PM
image

(ஆர்.யசி)

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவையில் எழுத்துமூல ஆவணம் முன்வைக்காது, அனுமதியும் பெறப்படாது யார் நிறைவேற்றியது என ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் பங்காளிக்கட்சிகள் அவசரமாக ஜனாதிபதியை சந்திக்கவும் தீர்மானமாம்.

300 மெகாவாட் திரவ இயற்கை வாயு மின் உற்பத்திக்கு ஒப்புதல் - MediaLK - Tamil

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் திறைசேரிக்கு சொந்தமான 50 வீத பங்குகளில் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் கைச்சாத்திடப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் ஆளுந்தரப்புக்குள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த உடன்படிக்கையை மேற்கொள்ள அமைச்சரவை பத்திரம் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சரவையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

“சூம்” மூலமாக அண்மைக்காலமாக அமைச்சரவை கூட்டங்கள் உற்பட பல முக்கியமான கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டமும் அவ்வாறே கூடியுள்ளது.

இதன்போது கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் திறைசேரிக்கு சொந்தமான 50 வீத பங்குகளில் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் குறித்து நிதி அமைச்சர் பஷில் ராஜ்பஷ கருத்துக்களை கூறியுள்ளார். 

எனினும் அமைச்சரவை பத்திரம் என எழுத்துமூல ஆவணங்கள் எதுவும் முன்வைதிருக்கப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மஹிந்த அமரவீர  உள்ளிட்ட சிலர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் ஆரோக்கியமான விடயங்களை முன்னெடுக்க முடியும் ஆனால் அரச சொத்துக்களில் பெரும்பாலான பங்கை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதை பங்காளிக்கட்சியாளாக செயற்படும் தரப்பினர் கண்டித்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சரவையில் குறித்த பத்திரம் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

எனினும் குறித்த கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் திறைசேரிக்கு சொந்தமான 50 வீத பங்குகளில் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான அனுமதிப்பத்திரம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் இடையில் கருத்து முரண்படுகள் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்,

 “ உடன்படிக்கையை வேறு விதத்தில் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது தொடர்ச்சியான கோரிக்கையாக இருந்தது. அமைச்சர்சவையிலும் இதனை நாம் கோரினோம்.

இறுதியாக அமைச்சரவையில் இது அனுமதி பெற்றிருக்கவில்லை . எவ்வாறு இதனை நிறைவேற்றினர் என எமக்கும் தெரியவில்லை. ஜனாதிபதி நாடு திரும்பியவியுடன் அவருடனும், பிரதமருடன் இது குறித்து நாம் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க தீர்மானித்துள்ளோம். எனினும் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக கூறும் கருத்து பொய்யானது என்றார்.

இந்நிலையில் சூரிய சக்தி , காற்று , நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயகவிடம் இது குறித்து வினவியபோது அவர் கூறியதானது, 

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தினூடாக எரிவாயு மற்றும் மின்சார உற்பத்தி என்பவற்றை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்மானம் கேள்விமனுக்கோரலுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. சில தீர்மானங்களை எடுக்கும் வேளையில் இணக்கங்களுக்கு வர வேண்டியுள்ளது.

எனினும் இலங்கைக்கு மிகவும் அவசியமான வேலைதிட்டமொன்றாகவே இதனை நாம் கருதுகின்றோம். இந்த விடயத்தில் சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டு குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை. எமது வளங்களை வேறு நாடுகளுக்கு கொடுக்கும் நடவடிக்கை அல்ல இது.

அதுமட்டுமல்ல புதிதாக இது செய்துகொள்ளப்பட்ட ஒன்றும் அல்ல. ஏற்கனவே இந்த வேலைதிட்டதிற்கான இருதரப்பு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் அதனை  பாராளுமன்றத்தில்  சமர்பிக்க நடவடிக்கை எடுப்போம்.இது நாட்டின் முழுமையான மின் உற்பத்தி அதிகாரத்தை அமெரிக்காவிற்கும் கொடுக்கும் எந்த நோக்கமல்ல என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49