முல்லைத்தீவு மல்லாவி பிரதேசம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (20.09.2021) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் இனம்காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கணவனை பிரிந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் 32 வயதுடைய பிரதீபன் புஸ்பராணி எனும் இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது
பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மல்லாவி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM