அம்பாந்தோட்டை  பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்ட இளைஞர் திக்வெல்ல பகுதியில் உள்ள விகாரையொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விகாரையின் பிக்கு ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞரை அம்பாந்தோட்டை நிதிமன்றில் ஆஜர்படுத்தியதோடு, வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை காணாமல் போயிருந்த இளைஞர் பொலிஸ் தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நெற்தொகுதியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதாகவும், பின்னர் பொலிஸ் காவலில் இருந்த போது காணமல் போனதாகவும் அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.