ரஷ்யாவின் கசான் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஏழு சிறுவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த  சம்பவத்தில் பெரும்பாலான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய பள்ளி

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவுக்கு கிழக்கே 820 கிலோ மீற்றர் தூரத்தில் கசான் நகரத்திலுள்ள பாடசாலை ஒன்றிலேயே குறித்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவராக சந்தேகப்படும் இளைஞர் ஒருவரை தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், எந்த நோக்கத்துக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை, எனவும் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா பள்ளி

இந்நிலையில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஜன்னல்கள் வழியாக பாடசாலைக்குள் இருந்து சில சிறுவர்கள் குதித்து தப்பி ஓடுவதும் சிலர் அந்த முயற்சியில் விழுந்து காயம் அடைவதும் சிலர் வெளியேற்றப்படுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.

சம்பவத்திற்கு முதல் குறித்த பாடசாலைக்குள் இரண்டு துப்பாக்கிதாரிகள் இருந்ததாகவும் அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், அதனை பின்னர் மறுத்த அதிகாரிகள், தாக்குதலில் ஒரேயொரு சந்தேக நபரே ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா பள்ளி

ஒரு காணொளியில் கட்டடம் ஒன்றுக்கு வெளியே இனைஞர் ஒருவர் தரையில் படுக்க வைக்கப்பட்டு அவரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதும் பிறகு அவரை பொலிஸார் பிடித்துச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 

(படங்கள் - பீ.பீ.சி)