லொஹான் ரத்வத்த விவகாரத்தில் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்காமை விசனமளிக்கின்றது - ரோஹண ஹெட்டியாராச்சி

Published By: Digital Desk 2

20 Sep, 2021 | 05:56 PM
image

நா.தனுஜா

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் தொடர்புபட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டதன் பின்னரும் அவரிடம் இன்னமும் விசாரணை மேற்கொள்ளப்படாமை விசனமளிக்கின்றது.

 அதுமாத்திரமன்றி இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிறிதொருவரான சிறைச்சாலைகள் ஆணையாளரினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காது. 

ஆகையினால் இதுகுறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சமுதாயத்தின் நன்மதிப்பைப்பெற்ற குழுவொன்றை நியமிக்கவேண்டும் என்று 'மார்ச் 12' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதேவேளை லொஹான் ரத்வத்தையைக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன் அவருக்கெதிராக உரியவாறான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் நடத்தை தொடர்பில் அதிருப்தியை வெளியிடும் அதேவேளை, இதுகுறித்து பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பெப்ரல் அமைப்பு உள்ளடங்கலாக 'மார்ச் 12' இயக்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

 

ஆளுந்தரப்பைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையின் மிகவும் மோசமான நடத்தை தொடர்பில் மார்ச் 12 இயக்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

அண்மையில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்களையடுத்து, அதற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சுப் பொறுப்பிலிருந்து லொஹான் ரத்வத்தை பதவி விலகியிருக்கின்றார்.

 அதனூடாக இச்சம்பவத்துடன் அவர் ஏதோவொரு விதத்தில் தொடர்புபட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இச்சம்பவம் தொடர்பில் மார்ச் 12 இயக்கத்தின் சார்பில் நாம் எமது அதிருப்தியை வெளியிடும் அதேவேளை, லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என கூறப்பட்டுள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36