கட்டுகாஸ்தோட்டை கல்வி வலயத்திலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் ஒன்றிற்கு மாணவர் ஒருவரை அனுமதிப்பதற்காக ரூபா 15 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற குற்றத்திற்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த அதிபர் ரூபா 35 ஆயிரம் இலஞ்சமாக கோரியுள்ளார் என்றும் இதற்கு முன்னர் ரூபா 20 ஆயிரம் இலஞ்சமாக பெற்றுள்ளார் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும், கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(வத்துகாமம் நிருபர்)