யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 39 போிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

கடந்த 16ம் திகதி சிறைச்சாலையில் உள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  பரிசோதிக்கப்பட்ட நிலையில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதில் 22 வயதான இளம் பெண்ணும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.