யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை முதலியார் கோவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இரு குழுக்களுக்கிடையிலான தாக்குதல் சம்பவத்திற்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரவு 7 மணியளவில் முதலியார் கோவில் பகுதிக்கு வந்த குழு ஒன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு கதவு, ஜன்னல், வேலி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் 1990 நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM