மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

21 Sep, 2021 | 09:49 AM
image

பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

மத்திய அரசுக்கு எதிராக 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் பங்குபற்றிய கூட்டத்தில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

புதிய வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்ட விவகாரம், பெற்றோல், டீசல் விலை உயர்வு, பொது சொத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆ ராசா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்ற திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி, மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் திமுகவினர் மத்திய அரசுக்கு எதிரான கருப்புக் கொடி ஏந்தி, கண்டன போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52