உலக நாடுகளின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க நடவடிக்கை : சுற்றுலாத்துறை அமைச்சர் 

Published By: Digital Desk 2

20 Sep, 2021 | 01:42 PM
image

எம்.ஆர்.எம்.வசீம்

பயணக்கட்டுப்பாடு விதித்திருக்கும் நாடுகளின் சிவப்பு பட்டியலில்  இருந்து இலங்கையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைத்துக்கொள்வது தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு  குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 இராஜதந்திர மட்டத்தில் இதுதொடர்பான கலந்துரையாடல்களை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.  அந்த நாடுகளின் அரச தலைவர்கள், சுகாதார பிரிவினர் மற்றும் சுற்றுலா அதிகாரிகளை அறிவுறுத்துவதற்கு அதன் பிரகாரம்  நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

மேலும் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜேர்மன், கனடா, ஸ்பைன். சீனா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு நாடு போன்ற நாடுகள் இலங்கைக்கு பயணக்கட்டுப்பாடு விதித்திருக்கின்றன. என்றாலும் இங்கிலாந்து, ஜப்பான் தனது சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிக்கொண்டுள்ளதாக அறிவித்திருக்கின்றன.

கடந்த காலங்களில் நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்த காரணத்தினாலேயே இந்த நாடுகளின் சிவப்பு பட்டியலில் இங்கையை உள்ளடக்கி பயணக்கட்டுப்பாடு விதித்திருந்தன.

எனவே நாட்டின் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவேண்டி இருப்பதால், சுற்றுலா பயணிளுக்கு இருக்கும் தடைகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம். 

அதேபோன்று சுகாதார பிரவினரின் ஒருசில சுகாதார வழிகாட்டல்கள் காரணமாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்திருக்கின்றது. அதுதொடர்பாகவும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51