விவசாய வாழ்வாதார செயற்திட்டத்தின் மூலமாக 50 க்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் இலங்கையில் Ford மோட்டர் கம்பனியின் தயாரிப்புகளை விநியோகிக்கிறது. 

இந்நிறுவனம் கிளிநொச்சியில் விவசாய வாழ்வாதார செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஜப்பான் அவசர அரசசார்பற்ற நிறுவனம் (JEN) உடன் கைகோர்த்துள்ளது.

Ford இன் நிதியைக் கொண்டு JEN அமைப்பு, புலம்பெயர்ந்து பின்னர் மீண்டும் தமது பகுதிகளுக்கு மீண்டு வந்துள்ளவர்களுக்கு விவசாய செயற்பாடுகளின் மூலமாக தமது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. 

JEN இன் செயற்திட்டம் என்பது உலர் காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு உதவும் வகையில் விவசாய கிணறுகளை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளது. இதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் வருமான அதிகரிப்பை பெற்றுக் கொள்ள உதவுவதுடன், சுய தங்கியிருத்தலை எய்துவதற்கும் பங்களிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டம் இரு பிரதான இலக்குகளை எய்த பங்களிப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. முதலாவதாக, நீரைப் பெற்றுக் கொள்வதனூடாக விவசாயிகளுக்கு தமது விவசாய செயன்முறைகளை விஸ்தரிக்கவும், வருமான அதிகரிப்பை பெற்றுக் கொள்ளவும் இரண்டாவதாக, சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு இணைந்து செயலாற்றுவதன் மூலம் சமூகத்துக்கு வலுச்சேர்ப்பதையும் கவனத்தில் கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்துக்கான செலவீனத்தில் ஒருபகுதியை ஈடுசெய்வதற்கு Ford இன் நிதிப்பங்களிப்பு என்பது பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக 54 குடும்பங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்துக்கான நிதி வழங்கல் என்பது, Ford இன் காப்பு மற்றும் சூழல் வழங்கல்கள் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.

 2014 இல் Ethisphere இனால் தொடர்ச்சியான ஐந்தாவது ஆண்டாக உலகின் மிகச்சிறந்த ஒழுக்கநெறி வாய்ந்த நிறுவனமாக Ford தெரிவு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்காவின் 100 சிறந்த கூட்டாண்மை குடிமகன்கள் தரப்படுத்தலில் ஒன்றாக கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு சஞ்சிகையினால் Ford தரப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் JEN இன் செயற்பாடுகள் 2005 இல் ஆரம்பமாகியிருந்தது. அம்பாந்தோட்டையில் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான உதவிகளை வழங்கலுடன் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அன்று முதல், JEN இனால் இலங்கையின் வெவ்வேறு சமூகங்கள் மற்றும் பங்காளர்களுடன் பங்காண்மைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகள், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலும் இந்த அமைப்பின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மெனிக் ஃபார்ம் அகதிகள் முகாமிலும் உதவிகளை JEN  வழங்கியிருந்தது. 

இந்த அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளில் நிவாரண பொருட்கள் விநியோகம், மீன்பிடி மற்றும் விவசாய பிரிவுகளில் வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் கூரைத்தகடுகள் விநியோகம் போன்றன உள்ளடங்கியிருந்தன.

இந்த நிதி உதவி வழங்கல் தொடர்பில் ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் பிரைவட் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி சமத் தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில்,

“JEN க்கு நாம் வழங்கியுள்ள இந்த நிதி உதவியின் மூலமாகரூபவ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்து தற்போது மீண்டும் தமது பகுதிகளுக்கு திரும்பியுள்ள மக்களுக்கு தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பிக் கொள்ள வாய்ப்பளிப்பதாக அமைந்திருக்கும் என நாம் கருதுகிறோம். சேதன மற்றும்

ஆரோக்கியமான விவசாய செயன்முறைகளில் ஈடுபாட்டைக் கொண்டுள்ள நான், தேவைகளை கொண்டுள்ள விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவிகளை வழங்க வாய்ப்புக்கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். 

தூய குடிநீர் விநியோகம் மற்றும் சூழல் நிலைபேற்றுத்தன்மை போன்றன தொடர்பில் JEN க்கு நாம் உதவிகளை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

JEN இன் நிகழ்ச்சி அதிகாரி சியாகி ஒடா கருத்து தெரிவிக்கையில்,

“ JEN என்பது, Ford இன் நிதி உதவிகளைக் கொண்டு, கடந்த ஐந்து ஆண்டு காலமாக சர்வதேச மட்டத்தில் நிவாரண செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலமாக உலகளாவிய ரீதியில் பல திட்டங்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

இலங்கையிலும் இந்த நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு Ford இடமிருந்து நிதி உதவி கிடைத்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையில் Ford உடன் புதிய உறவுகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

கிளிநொச்சியில் அமைந்துள்ள எமது செயற்திட்ட பகுதிகளில் பணியாற்றுவதற்கு அணியினரை வரவேற்க நாம் எதிர்பார்த்துள்ளோம். அதனூடாக இந்த செயற்திட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தகவல்களை பரிமாறுவதற்கு அதனை சமூகத்துக்கு பயனுள்ளதாக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

கடந்த பல ஆண்டுகளாக, இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்திட்டங்களுக்கு தனது காப்பு மற்றும் சூழல் மானிய நிகழ்ச்சித்திட்டத்தினூடாக Ford உதவிகளை வழங்கியிருந்தது. மிக அண்மையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பகுதியில் நீர் மற்றும் தூய்மையாக்கல் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு வேர்ள்ட் விஷன் லங்கா லிமிட்டெட்டுக்கு நிதி உதவிகளை வழங்கியிருந்தது. 

இந்த திட்டத்தின் மூலமாக இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த 220 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2014 இல், Ford இனால் Field Ornithology Group of Sri Lanka (FOGSL) க்கு 20,000 அமெரிக்க டொலர்கள் வழங்கியிருந்தது.

2013 இல், நிறுவனத்தினால் The Tree Society of Sri Lanka மற்றும் The Tree Society of Sri Lanka ஆகிய இரு நிறுவனங்களுக்கு மொத்தமாக 15000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருந்தது. 2012 இல், "Fire Prevention in Knuckles Forest Reserve"  செயற்திட்டம் இந்த திட்டத்தின் அங்குரார்ப்பண திட்டமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

1994 ஜனவரி மாதத்தில் ஸ்தாபிக்கப்பட்ட JEN, யுகொஸ்லாவியாவின் அகதிகளுக்கும் தற்காலிகமாக இடம்பெயர்ந்தவர்களுக்கும் அவசர உதவிகளை வழங்கும் நோக்கில் அமைந்திருந்தது. பின்னர், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது உதவிகளை நீடித்திருந்தது. “Support the Power to Live” எனும் தொனிப்பொருளுக்கமைய, உள்நாட்டு திறன் விருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.