மதுபான விற்பனை நிலையங்கள் திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : இருவர் கைது

Published By: Digital Desk 2

20 Sep, 2021 | 10:36 AM
image

எம்.எப்.எம்.பஸீர்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில்,  மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, நேற்று கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டமானது நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார பாதுகாப்பு ஆடைகளை அணிந்த வண்ணம் சுமார் 20 பேர் வரையில் இணைந்து சமூக இடைவெளியைப் பேணி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சகபாடிகளுக்கு மது விருந்து , பொது மக்களுக்கு கடுங்கஷ்டம்,  மதுபான விற்பனை நிலையங்கள் அத்தியவசிய சேவையா?, பணக்காரர்களுக்கு பார்ட்டி - ஏழைகளுக்கு துன்பம், பல்பொருள் அங்காடிகள் திறப்பு - நடைபாதை வர்த்தகர்கள் தவிப்பு உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள்  தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த கோட்டை ரயில் நிலையம் அருகே வந்த கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவினர் ஆர்ப்பாட்டத்தை கலைக்க உத்தரவிட்டனர்.

இதன்போது அர்ப்பாட்டக்கார்களுக்கும் பொலிஸாருக்குமிடையே  வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க எந்த அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது என ஆர்ப்பட்டக்காரர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். 

தமது சுய தொழில் முயற்சிகளுக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது குறித்த இடத்திலிருந்த கோட்டை பொலிஸ் நிலைய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் '  இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியாது.' என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்தார்.

 எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது ஆர்ப்பாட்ட கோஷங்களை முன் வைத்துக் கொண்டிருந்த போது திடீரென பொலிஸார், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின்  தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்ட இருவரை பலாத்காரமாக இழுத்துச் சென்று ஜீப் வண்டியில் ஏற்றினர். 

பின்னர் அவ்விருவரும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  அறிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-26 06:29:57
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47