2021 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்குப் பிறகு விராட் கோலி அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்தது.

எனினும் உரிமையாளரின் மிகவும் விரும்பப்பட்ட வீரர்களில் ஒருவரான 32 வயதான கோஹ்லி, ஆர்.சி.பி. அணியின் ஒரு முக்கிய வீரராக தொடர்ந்தும் இருப்பார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி,

ஆர்.சி.பி.யின் கேப்டனாக இது எனது கடைசி ஐபிஎல். எனது கடைசி ஐ.பி.எல். விளையாட்டை விளையாடும் வரை நான் ஒரு ஆர்.சி.பி. வீரராகவே இருப்பேன். என்னை நம்பி என்னை ஆதரித்த அனைத்து ஆர்.சி.பி ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.