20 ஓட்டங்களினால் சென்னையின் அசத்தலான வெற்றி

Published By: Vishnu

20 Sep, 2021 | 08:20 AM
image

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களினால் அசத்தலான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

2021 ஐ.பி.எல். தொடரின் 30 ஆவது லீக் போட்டி நேற்றைய தினம் டுபாயில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலும் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

அதன்படி ஆறு ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்த சென்னை 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது.

எனினும் 5 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட் கைகோர்த்து அதிரடி காட்டினார்.

இதனால் சென்னை 16.2 ஓவர்கள் நிறைவில் 100 ஓட்டங்களை கடந்தது, எனினும் அதே ஓவரின் நான்காவது பந்து வீச்சில் ஜடேஜா 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை குவித்தது.

ருதுராஜ் கெய்க்வாட் மொத்தமாக 58 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரகள் அடங்கலாக 88 ஓட்டங்களுடனும், தாகூர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் ட்ரென்ட் போல்ட், ஆடம் மில்னே மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

157 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக திவாரி 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டம் பெற்றார்.

சென்னை அணி சார்பில் பந்து வீச்சில் பிராவோ 3 விக்கெட்டுக்களையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுக்களையும், ஹேசில்வுட் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6 வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இன்று அபுதாபியில் நடைபெறும் 31 ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit ; IPL

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09