மனைவி பொல்லால் தாக்கியதில் கணவன் பலி ! பொலிஸில் சரணடைந்த மனைவி !

19 Sep, 2021 | 10:20 PM
image

 மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் 18.09.2021 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் வருகைத் தந்த கணவர், நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மனைவி, கணவரை பொல்லால் தாக்கியுள்ளதை அடுத்து, கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, தனது 8 வயதான மகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்த 27 வயதான மனைவி, அதிகாலை தனது மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தையை ஒப்படைத்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவத்தில் அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 16:30:43
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44