(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும். ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக நிவாரணம் வழங்கப்படாவிட்டால் சட்டநடவடிக்கையை முன்னெடுக்க  தீர்மானித்துள்ளோம்.

பேருந்து. புகையிரதம் சேவை ஊடாகவா கொவிட் தொற்று பரவலடைகிறது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

Lanka Private Bus Owners Association - Posts | Facebook

 

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையயாளர்களுக்கும்,சேவையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக நிவாரணம் கிடைக்காவிட்டால் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

 தனியார் பேருந்து, புகையிரதங்களை தவிர ஏனைய போக்குவரத்து சாதனங்கள் சேவையில் ஈடுப்படுகின்றன. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதா என்று கருதும் அளவிற்கு வாகன நெரிசல் காணப்படுகிறது. 

புகையிரதம் மற்றும் தனியார் பேருந்து சேவையிலா கொவிட-19 வைரஸ் தொற்று பரவலடைகிறது என்றார்.