வெளிநாட்டு நாணயத்தாள்களைக் கடத்திச் செல்ல முற்பட்ட வெளிநாட்டுப் பெண்ணொருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் மற்றும் 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த நாயணத்தாள்களை, கட்டார் நாட்டிற்கு கடத்த முற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த பெண் ஈரான் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.