போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்படும் - பாதுகாப்பு அமைச்சு உறுதி

Published By: Digital Desk 2

19 Sep, 2021 | 06:56 PM
image

எம்.மனோசித்ரா

நாட்டிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் கொண்டு வரப்படும் அனைத்து மார்க்கங்களும்  புலனாய்வு பிரிவினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் மேலும் கட்டுப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடற்படை, பொலிஸ் புலனாய்வு பிரிவுடன் ஒன்றினைந்து இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில், 1,575 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 170 கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஹெராயின் போதைப்பொருளை எடுத்துச் சென்ற வெளிநாட்டு மீன்பிடி படகினை கைப்பற்றி  நேற்று  சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

மீன்பிடி படகு என்ற போர்வையில் நாட்டின் தெற்கே சுமார் 800 கடல் மைல் (சுமார் 1574 கிலோமீற்றர்)  தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டவாறு இருந்த போதைப்பொருள் ஏற்றப்பட்டிருந்த படகே இவ்வாறு கைப்பற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் போதைப்பொருள் பாவனை இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் கடற்படை,  இது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

போதைப்பொருள் ஒழிப்புக்காக முப்படை மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினர் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) உறுதிப்படுத்தினார்.

நாட்டிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் கொண்டு வரப்படும் அனைத்து மார்க்கங்களும்  புலனாய்வு பிரிவினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் மேலும் கட்டுப்படுத்தப்படும் எனவும்  பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55