பொதுச்சபை உரையில் கோட்டா சொல்லப்போகும் செய்தி என்ன?

By Digital Desk 2

19 Sep, 2021 | 06:52 PM
image

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நோக்கி நேற்று அதிகாலை பயணமாகியுள்ளார். 

இவருடன் வெளிவிவகாரஅமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும்வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் பயணித்துள்ளர்.

எதிர்வரும் 21ஆம் திகதி பொதுச்சபைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதிகோட்டாபயவின் உரையானது 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது அவர் சர்வதேச சமூகத்திற்குசொல்லப்போகும் செய்தி என்ன என்ற கேள்விகள் வலுத்துள்ளன. 

உள்நாட்டில் பொருளாதார நெருக்களுக்கு முகங்கொடுத்துள்ள அதேநேரம், மனிதஉரிமை மீறல்கள், ஜனநாயக விரோத செயற்பாடுகள், சிவில் நிருவாகத்தில் இராணுவப்பிரசன்னம்,பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் முன்னெடுக்காமை உள்ளிட்டவற்றால் அமெரிக்கா உட்பட சர்வதேசநாடுகளால் கடுமையான விமர்சனத்திற்கு கோட்டாபய உள்ளாகியுள்ளார். 

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில்உயர்ஸ்தானிகரும் வாய்மொழிமூலமான அறிக்கையில் சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.அதற்க அண்மித்ததாக சிறைச்சாலையில் கைதிகள் அச்சுறுத்தப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் பூதாகரமாகிஐ.நா.வதிவிடப்பிரதிநிதியே கரிசனை கொள்ளுமளவிற்கு நிலைமைகள் பாராதூரமாகியுள்ளது. இந்நிலையில்தான் ஜனாதிபதி கோட்டாபயவின் உரை நிகழப்போகின்றது. 

இதேவேளை, இந்தப்பயணத்தின்போது பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவருகை தந்துள்ள இந்தியப்பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்களுடனும் சந்திப்புக்களைநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்கான உத்தியோகபூர்வபயணத்தில் முதற்பெண்மணியான ஜனாதிபதியின் பாரியார் அனோமா ராஜபக்ஷவும் இணைந்துகொண்டுள்ளார்.எனினும் அவருடைய பயணச் செலவுகள் தனிப்பட்ட வகையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்