என்.கண்ணன்

“லொஹான் ரத்வத்த பதவியில் இருந்து விலகியிருப்பதை, அரசாங்கத்தின்பொறுப்புக்கூறலாக உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் காண்பிக்க ஆளும் தரப்பினர் முனைகின்றனர். இலங்கையில் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம்,ஊறிப்போன அரசியல் வழமை” 

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தி, இழிவுபடுத்தி, சித்திரவதைசெய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,அரசியல் கட்சிகள், சட்டத்துறை சார்ந்த அமைப்புகள் என்று எல்லாத் தரப்பினரும்இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக, நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும்என்றும், அவர் கைது செய்யப்பட்டு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக விசாரணைகளைதொடங்கியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியிருக்கிறது. சிறைச்சாலைத்துறையினரால் ஒரு விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், மனித உரிமைசெயற்பாட்டாளர்கள், சிறைக் கைதிகளின் நலன்களைப் பேணுகின்ற அமைப்புகள், அரசியல்தலைவர்கள் விடுத்த வேண்டுகோள் மட்டும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இதுதொடர்பாக நம்பகமான-பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த விசாரணைகளில் பொலிஸ்மற்றும் சிறைச்சாலை துறையை சாராதவர்களே ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள்வலியுறுத்தியிருந்தனர்.

அவ்வாறான ஒரு விசாரணையை அரசாங்கம் இன்னமும்  ஆரம்பிக்கவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.