பால்மா விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை - லசந்த  அழகியவண்ண

Published By: Digital Desk 4

19 Sep, 2021 | 04:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இறக்குமதி செய்யப்படும்  பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. 

ஒரு கிலோ கிரேம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவிலேயே தீர்மானிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த  அழகியவண்ண தெரிவித்தார்.

Articles Tagged Under: லசந்த அழகியவண்ண | Virakesari.lk

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கடந்த ஒரு மாதகாலமாக கோரி வருகின்றன.

விலை அதிகரிக்க அனுமதிக்கப்படாதமையால் அவர்கள் தற்போது இறக்குமதியை மட்டுப்படுத்தி இருக்கின்றனர். அதனால் சந்தையில் கடந்த சில வாரங்களாக பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த பின்னணியில் பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்குமிடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பது, கப்பல் கட்டணம் அதிகரித்திருப்பது, ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது போன்ற காரணங்களுக்கமைய ஒரு கிலோ கிராம் பால்வின் விலையை 350 ரூபாவரை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர். 

என்றாலும் சந்தை நிலைமை மற்றும் இறக்குமதி வரி தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு கிலோ பால்மாவின் விலையை 200ரூபாவரை அதிகரிப்பது தொடர்பில் கொள்கையளவில் இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.

இருந்தபோதும் பால்மாவுக்கான விலை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை இதுவரை அனுமதி வழங்கவில்லை. எதிர்வரும் வாரத்தில் வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு இதுதொடர்பாக கலந்துரையாடிய பின்னரே விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா 945 ரூபாவுக்கும் 400 கிரேம் பால்மா 380ரூபாவுக்குமே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 200ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டால் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை ஆயிரத்தி 145ரூபாவாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19