பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பெயரில்  போலி பேஸ்புக் கணொக்கொன்றை ஆரம்பித்து மோசடியில் ஈடுபட்ட நபரின் விளக்கமறியல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபரின் தொலைபேசி தொடர்பான அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர் நியுஸிலாந்து பிரஜையென்பது குறிப்பிடத்தக்கது.