ஹம்பாந்தோட்டை துறைமுகம் திட்டமிட்டு சீனாவுக்கு வழங்கப்பட்டதா?  

Published By: Digital Desk 4

20 Sep, 2021 | 08:50 AM
image

பெய்ஜிங்கின் இலட்சிய இலக்கான ஒரு பாதை ஒரு மண்டலம்  உள்கட்டமைப்பு முயற்சியானது இலங்கையின் மூலோபாய இடத்தில் ஒரு வெள்ளை யானை கூறப்படுகின்றது. பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக வந்த மற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஒப்பிடுகையில் சீனர்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் பாரிய கடன் வசதிகளுடன் பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் அடுத்தடுத்த அரசாங்கங்கள் சீனாவின் கடன் வலையில் மூழ்காமல், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், தாமரை கோபுரம் , நெடுஞ்சாலைத் திட்டங்கள், மற்றும் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற  துறைமுக நகர் திட்டங்களை சிறப்பாக நெறிப்படுத்தியிருந்தால் பொருளாதார நெருக்கடிகளை தவிர்த்திருக்க முடியும்.

மிகப்பெரிய வருமான துறையாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் காணப்படுகின்ற நிலையில் சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு சலுகையுடன்கடன்களை வழங்குகின்றது.  ஹம்பாந்தோட்டை  துறைமுகம் ஊடாக சிறந்த பலன்களை இலங்கையால் பெற்றுக்கொள்ள முடிந்தும் , 2017 ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால் 85 வீத பலன்கள் நாட்டிற்கு கிடைக்காமல் போயுள்ளது.

சீன கடன் குறித்து சர்வதேச கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கை உட்பட 24 நாடுகளுடனான 100 கடன் ஒப்பந்தங்களை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் எந்தளவு உள்ளது என்பது வெளிப்படுகின்றது.  2017 ஆம் ஆண்டில், துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது, சீனாவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான 99 வருட ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டது.

எனவே இந்த துறைமுகத்தை 100 வருட குத்தகைக்கு அல்லது அதற்கு அப்பால்  சீனாவால் எடுத்துக்கொள்வதற்கு முடிகிறது. கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது சீனா பல வெளிநாடுகளில் பின்பற்றும் மூலோபாயம் இதுதான்.

இலஞ்சம் ஊழல்களை நிராகரித்து சிறந்த நோக்குடன் 2010 ஆம் ஆண்டில் கனேடிய முதலீட்டாளர் ஹம்பாந்தோட்டையில் எல்என்ஜி திட்டத்துடன் அபிவிருத்திக்கு முன்வந்தார். முதலீட்டு தொகையானது 1.4 பில்லியன் டொலர்களாகும்.  ஆனால் அந்த திட்டத்திற்கு இலங்கை ஆதரவு வழங்க வில்லை. க்ரீன்லிங்க் குளோபல் கன்சல்டிங்  என்ற கனேடிய நிறுவனமே இவ்வாறு முன்வந்திருந்தது.

க்ரீன்லிங்க் நிறுவனமானது  1.4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அமெரிக்க - கனடா ஆதரவு முதலீட்டை ஹம்பாந்தோட்டை எரிசக்தி திட்டம் என்ற தலைப்பில் முன்வைத்தது. இந்த திட்டமானது 25 வருட குத்தகைக்கு மட்டுப்படுத்தப்பட்டதே தவிர 100 ஆண்டுகளுக்கு அல்ல. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன வசமாகியிருக்காது.

இந்நிலையில் 2010, 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் முதலீட்டு சபை ஊடாக முதலீடு செய்ய ஆர்வம் காட்டிய மேலும் சில முதலீட்டாளர்கள் இருந்ததுடன், லாஃப் கேஸ் நிறுவனம் மாத்திரம் 80 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தை தன்னகம் படுத்தியதாக துறைமுக அதிகார சபை குறிப்பிட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த கனேடிய முதலீட்டாளர் உட்பட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஹம்பாந்தோட்டைக்கு சென்று ஆய்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த திட்டம் குறித்து கனேடிய அரசாங்கத்தின் சர்வதேச ஒப்பந்தம் மற்றும் கொள்முதல் நிறுவனம் கனேடிய வணிகக் கூட்டுத்தாபனம்என்பன மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தது. கனேடிய நிறுவனம் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன. மேலும் இந்த முதலீட்டு திட்டத்தை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் எதிர்ப்பாராத விதத்தில் அரசியல் ரீதியிலான எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில் , சர்ச்சைக்குறிய விதிமுறைகளின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் சீனாவுடன் இலங்கை  2017 கைச்சாத்திட்டது. கனேடிய நிறுவனம் சட்டபூர்வமான வளர்ச்சி உரிமைகளைக் கொண்டிருப்பதாகக் கூறிய போதும் திட்டம் கையைவிட்டுப்போனது. வாக்குறுதிகள் மீறப்பட்டமை உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் பலனளிக்க வில்லை.  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சர்வதேச முதலீடுகளுக்குத் திறந்துவிட வேண்டும், எல்என்ஜி திட்டத்தை முதலில் பெற வேண்டும் என கிரீன்லிங்க் நிறுவனம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தது. ஆனால்  ரணில் - மைத்திரி அரசு  கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாது இழுத்தடிப்பு செய்தது.

இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள  நிலையில்  இலங்கை கடல் வணிகத்தின் மையமாக மாறும் வாய்ப்பை இழந்துள்ளதாக இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் புவிசார் அரசியல் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு பதிலாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் சீனாவுக்குப் பின் ஓடின. இதன் விளைவாக ஹம்பாந்தோட்டை துறைமுகம்  85வீத பங்குகளுடன் சீனாவுக்கு  குத்தகைக்கு  வழங்கப்பட்டுள்ளது.  இதனால் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு இழந்துள்ளது.

1.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக வருடத்திற்கு சுமார் 100 மில்லியன் டொலர்களை இலங்கை சீனாவுக்கு வழங்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் உள்ள தற்போதைய அரசாங்கமும் ஹம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. எவ்வாறாயினும் கனடாவின் எல்.என்.ஜி திட்டம் கைமாறியதன் பின்னணியில் சீனா இருந்ததா? என்பது முக்கியமான கேள்வியாகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04