(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 551 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபானத்தில் நச்சுத்திரவம் கலந்து கணவனுக்கு கொடுத்த மனைவி கைது -  மட்டக்களப்பில் சம்பவம் | Virakesari.lk

அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 75 058 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவை தவிர சோதனைகளின் பின்னர் 851 வாகனங்களில் பயணித்த 1307 பேர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று 833 வாகனங்களில் பயணித்த 1261 பேர் மேல் மாகாணத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.