2021 இந்திய பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பதிப்பு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் 14 ஆவது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 

29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. 

இந்நிலையில் இடையில் நிறுத்தப்பட்ட இந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. 

இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று தொடங்கி எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடக்கிறது.

எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும்.

அதன்படி துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடைபெறும்.

இந்த சீசனில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் டெல்லி 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சென்னை 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பெங்களூரு 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், மும்பை 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ராஜஸ்தான் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், பஞ்சாப் 6 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும், கொல்கத்தா 4 புள்ளிகளுடன் ஏழாம் இடத்திலும் மற்றும் ஹைதராபாத் 2 புள்ளிகளுடன் எட்டாம் இடத்திலும் உள்ளன.