நாளை மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதல்

Published By: Digital Desk 3

18 Sep, 2021 | 10:58 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாளை நடைபெறும்  ஐ.பிஎல்.தொடரின் 30 ஆவது லீக் போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

14 ஆவது  ஐ.பி.எல் டி 20 கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமானது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே  மாதம் 2 ஆம் திகதியன்று  29 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஐ.பி.எல். போட்டித் தொடர்  பிற்போடப்பட்டது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுவதாலும் உலக இருபதுக்கு 20 கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதாலும் எஞ்சிய போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபையானது எஞ்சியப் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றிக்கொண்டது. 

14 ஆவது ஐ.பி.எல். அத்தியாயத்தில் இரண்டாவது கட்டப் போட்டிகள்  நாளை (19) முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.  எஞ்சிய 27 லீக் போட்டிகள் அடங்கலாக  4 பிளே ஓப் போட்டிகள் என மொத்ததமாக  31 போட்டிகள்  துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

துபாயில் 13 போட்டிகளும் , சார்ஜாவில் 10 போட்டிகளும், அபுதாபியில் 8 போட்டிகளும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் 8 ஆம் திகதியுடன் லீக் போட்டிகள் நிறைவடைகிறது.

முதல் தகுதிகாண் போட்டி ஒக்டோபர் 10 ஆம் திகதியன்றும்,  வெளியேறும் போட்டி 11 ஆம் திகதியன்றும் இரண்டாவது தகுதிகாண் போட்டி 13 ஆம் திகதியன்றும் நடைபெறவுள்ளன. வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஒக்டோபர் 15 ஆம் திகதியன்று துபாயில் நடைபெறும்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் நிறைவில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியன  10 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வகிக்கின்றன. நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் (6 புள்ளிகள்), பஞ்சாப் கிங்ஸ் (6 புள்ளிகள்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2 புள்ளிகள் ) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

கொரோனா அச்சுறுத்தல் காரணத்தால் பல ‍வெளிநாட்டு வீரர்கள் விலகிக்கொண்டதால் புதிதாக வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஒவ்வொரு அணிகளிலும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அந்த வகையில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இலங்கையின் வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் விளையாடவுள்ளனர்.

இம்முறை ஐ.பி.எல். இல் இலங்கை வீரர்கள் ஒருவரும் இல்லாத நிலையில் இவ்விருவரும் பெங்களூர் அணிக்காக விளையாடவுள்ளமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35