இந்திய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மஹேல ஜயவர்த்தன நிராகரித்துள்ளார்.

“ இலங்கை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு மட்டுமே பயிற்றுநராக இருக்க விரும்புகிறேன் ” என தனது நிராகரிப்பிற்கான காரணத்தை மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்றுவிப்பாளரா இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டிகளுடன் நிலைவுக்கு வருகின்றது.

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அனில் கும்ளேக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹேல ஜயவர்தனவிடம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.