(எம்.மனோசித்ரா)

மதுபானசாலைகளை திறப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் மிகவும் கவலைக்குரியதாகும். இது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளையும் சீர்குழைக்கும் வகையிலான செயற்பாடாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

இந்த விடயத்தில் பாதுகாப்பு பிரிவு முறையாக செயற்பட வேண்டும். சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சட்டமானது வெவ்வேறு நபர்களின் கைகளில் ஒப்படைக்கப்படக் கூடாது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்தார்.