நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000 ஐ கடந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை  பதிவான 84 மரணங்களுடன் மொத்த கொரோனா  மரணங்களின் எண்ணிக்கை 12,022 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 51 ஆண்களும் 33 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் 58 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். இதேபோன்று 30 வயதுக்கு குறைவானோரில் மூவரும் இதில் உள்ளடங்குகின்றனர்.