(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்குப் பயணமானார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச்சபைக்கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் தலைநகர் நியூயோர்க்கில் எதிர்வரும் செவ்வாய்கிழமை (21 ஆம் திகதி) ஆரம்பமாகின்றது.
'கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை மேம்படுத்தல், நிலைபேறானதன்மையை மீளக்கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளைக் கவனத்திற்கொள்ளல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்முறை கூட்டத்தொடரில் உலகநாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச்செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தில் அரசதலைவர் என்ற ரீதியில் உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
அதன்படி எதிர்வரும் புதன்கிழமை (22 ஆம் திகதி) பொதுச்சபைக்கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உரையாற்றவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM