(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான இலங்கை தூதுவராக நியமனம் பெறவுள்ளமையின் காரணமாகவே அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நாட்டிலிருந்து செல்வதற்கு முன்னர் மஹிந்த சமரசிங்கவை அழைத்து இது குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றி ரவிநாத் ஆரியசிங்க தனது ஓய்வை அறிவித்ததையடுத்து, அந்த பதவிக்கு நியமிப்பதற்கு பொறுத்தமானவர் மஹிந்த சமரசிங்க என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாகக் காணப்பட்டுள்ளது.

அதேவேளை மஹிந்த சமரசிங்க இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் குறித்த விடயங்கள் தொடர்பாக செய்யற்பட்டுள்ளதோடு, அது குறித்த அனுபவம் மிக்க நபராகக் காணப்படுகிறார்.

அத்தோடு ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை ஒரு சந்தப்பத்தில் தோல்வியடைச் செய்வதற்கும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.