எம்.மனோசித்ரா

இலங்கை மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ பயிற்சி உட்பட பாதுகாப்பு விடயங்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

எகிப்து குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான  தூதுவர் ஹூசைன் எல் சஹார்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கிடையிலான  சந்திப்பின் போதே இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது  எகிப்திய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ பயிற்சி உட்பட பாதுகாப்பு விடயங்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை வலுப்படுத்த தூதுவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய அதேவேளை, அதற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை பாதுகாப்பு செயலாளர் அதை உறுதி செய்தார்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் இலங்கைக்கான எகிப்து தூதரகத்தின் பிரதி தூதுவர் கரீம் அபுலெனெய்ன் ஆகியோர் கலந்துகொண்டனர்.