ஆரம்பிக்க சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி - இது தான் காரணம்

Published By: Digital Desk 2

18 Sep, 2021 | 12:14 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்கு சிறிது நேரமே இருந்தவேளையில் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை நிறுத்துவதற்கு நியூஸிலாந்து தீர்மானித்தது. பாதுகாப்பு விடயத்தை காரணம் காட்டி இந்த தீர்மானத்தை எடுத்ததாக நியூஸிலாந்து கிரிக்கெட் ச‍பை தெரிவிக்கிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானிலிருந்து திடீரென வெளியேற எடுத்த முடிவு முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி நேற்று (17) ராவல்பிண்டியில் ஆரம்பமாகவிருந்தது.

இந்நிலையில், இப்போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் இருந்தவேளையில்,  பாகிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தயாரானது. 

இதற்கான காரணத்தை நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவிக்காதபோதும், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை இரத்து செய்து பாகிஸ்தானிலிருந்து வெளியேற தீர்மானித்தது.

"இப்போட்டித் தொடரிலிருந்து நாம் வெளியேறுவது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு  பெரும் ஏமாற்றமாகும். எனினும், வீரர்களின் பாதுகாப்ப‍ே எமக்கு  பிரதானமாகும்" என நியூஸிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்ற அதிகாரி டேவிட் வைட் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி  18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா  மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31