எம்.மனோசித்ரா

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் யக்கல பொலிஸ் பிரிவில் பெலும்மஹர பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில்   8,155 கிலோ கழிவுத் தேயிலையை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி லொறியொன்றில் கொண்டு சென்ற இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 28 மற்றும் 43 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக யக்கல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.