ஆப்கானிஸ்தான் தலைநகர் கபூலில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பொது மக்கள் உயிரிழந்தாக பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 29 அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் இஸ்லாமிய அரசு தற்கொலைப்படை தாக்குதலை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் மொத்தமாக 10 பேர் உயிரிழந்தனர். 

அவர்கள் தொடர்பான அமெரிக்க மத்திய கட்டளையின் விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளில் உயிரிழந்தவர்கள் எவரும் இஸ்லாமிய அரபு பேராளிகள் அல்ல என்றும், அவர்கள் பொது மக்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கன்சி வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தியுள்ளதுடன், தவறுதலுக்கு அமெரிக்கா சார்பில் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.

தலிபான்கள் திடீரென ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கொடிய தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.