இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதமானோருக்கு நேற்று வரை முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சினாபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 10,886,678 நபர்களுக்கும்,  இரண்டாவது டோஸ் 8,973,670 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அஷ்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் 1,445,818 நபர்களுக்கும்,  இரண்டாவது டோஸ் 949,105 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 777,069 நபர்களுக்கும்,  இரண்டாவது டோஸ் 758,282 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 452,233 நபர்களுக்கும்,  இரண்டாவது டோஸ் 243,685 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் 159,089 நபர்களுக்கும்,  இரண்டாவது டோஸ் 43,453 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் இன்று 212 கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

18.09.2021 செயலில் உள்ள தடுப்பூசி நிலையங்கள்