ஏ.என்.ஐ

உலகின் 18 முக்கிய நாடுகளின் சராசரி தினசரி கொவிட் -19 தடுப்பூசி வழங்குவதில் இந்தியா மிஞ்சியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமைச்சகத்தின் தகவல்களின்படி , 18 முக்கிய நாடுகள் 81,70,000 (8.17 மில்லியன்) கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. இந்தியா 85,40,000 (8.54 மில்லியன்) கொவிட் -19 தடுப்பூசியை வழங்கியுள்ளன.

முக்கிய நாடுகளின் பட்டியலில் ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ரஷ்யா ஆகியவை உள்ளடங்குகின்றன. மேலும் இந்தியாவில் 30,570 புதிய கொவிட் -19 தொற்றாளர்கள்  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.