நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது.

அதற்கமைய நேற்றையதினம் 2,070 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 500,764 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 429 776 பேர் குணமடைந்துள்ளனர். 58 258 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 121 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 11 938 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 62 ஆண்களும் 59 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 92 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.