இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகளின் மேலும் நான்கு மில்லியன் டோஸ்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL-865 என்ற விமானத்தில் இந்த அளவுகள் இன்று அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்வளவு அதிகளவிலான தடுப்பூசி அளவுகளை ஒரே தடவையில் இலங்கை கொள்வனவு செய்வது இது இரண்டாவது முறையாகும்.

விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசி அளவுகளை பின்னர் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பிரதான களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.