ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கி இன்று (18) காலை பயணமானார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முதல் முறையாக கலந்துகொள்ள உள்ளதுடன், ஜனாதிபதியாக பதவியேற்ற நிலையில் நாடு கடந்து சென்று சர்வதேச கூட்டத்தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.