தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் நாட்டிலுள்ள மதுபான நிலையங்களை மீண்டும் இன்று  திறக்க அனுமதியளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து மதுபானத்தைப் பெறும் ஆவலில் மதுப்பிரியர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, மலையகம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு மதுப்பிரியர்கள் மதுபானசாலைகளை நோக்கி படையெடுத்தனர்.

டெல்டா கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் மதுபானங்களை வாங்குவதற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட போதிலும் மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டமையால் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்புள்ளதாக மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமையானது மக்களிடத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மதுப்பிரியர்கள் முறையான  சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் மதுபானங்களை வாங்க திரண்டிருந்தனர்.

May be an image of one or more people, motorcycle and street

May be an image of one or more people, people standing, motorcycle, road and street

Image

Image

Image

Image

இதேவேளை, மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களை விற்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் சமூக இடைவெளி பின்பற்றல், சுகாதார வழிமுறைகளை பின்பற்றல் அவசியம் என கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் விருந்துபசார நிலையங்களில் இருந்து மது அருந்த முடியாது. 

கொவிட் 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குநடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எனினும்விருந்தகங்களில் மதுபான நிலையங்களை திறக்க முடியாது, ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டுசுற்றுலாப்பயணிகளுக்கு இந்த சலுகைகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைகளில் பியர் போத்தல்கள் மற்றும் சாராய போத்தல்களை விற்பனை செய்ய அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.