இலங்கையின் தேசிய பாடசாலை விளையாட்டுகள் - டெனிஸ் போட்டித்தொடர் 2016, செப்டெம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம்திகதி வரை இலங்கை டெனிஸ் சம்மேளன விளையாட்டுத்திடலில் நடைபெற்றது.

 கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டிகளில், 19வயதுக்குட்பட்ட 17 ஆண்கள் பாடசாலை அணிகள் மற்றும் 15 பெண்கள் பாடசாலை அணிகள் பங்கேற்றிருந்தன. 

மேல், கிழக்கு, வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாண அணிகள் பங்கேற்றிருந்தன. இந்த போட்டிகளுக்கு சுவதேஷி கொஹோம்ப Deo Fresh  அனுசரணை வழங்கியிருந்தது. 

இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையிலமைந்த இந்த வர்த்தக நாமத் தயாரிப்புகள், இயற்கை குணநலன்கள் கொண்டு வேப்பம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்படுகின்றன. உடலில் ஏற்படும் துர்நாற்றத்துக்கு சுவதேஷி கொஹோம்ப Deo Fresh  என்பது மூலிகை ரீதியிலான தீர்வு என்பதுடன் நபர் ஒருவருக்கு தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் வழங்குகிறது.

இந்த போட்டித் தொடரின் வெற்றியாளராக கல்கிசை பரி.தோமாவின் கல்லூரி அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், பெண்கள் பிரிவில் கொழும்பு விசாகா வித்தியாலய அணி வெற்றியீட்டியிருந்தது.

இரண்டாமிடங்களை முறையே பரி.பேதுரு கல்லூரி அணி மற்றும் மகளிர் கல்லூரி அணி ஆகியன பெற்றுக் கொண்டன.

தேசிய பாடசாலை போட்டிகள் - டெனிஸ் போட்டிகள் 2016 க்கு அனுசரணை வழங்குவதனூடாக பாடசாலை மட்டத்தில் விளையாட்டு மனப்பாங்கை கட்டியெழுப்புவது மற்றும் இளம் போட்டியாளர்களுக்கு தமது விளையாட்டு வாழ்க்கையை கட்டியெழுப்பிக் கொள்ள உதவுவதையும் சுவதேஷி கவனத்தில் கொண்டுள்ளது. 

போட்டித்தொடரில் சிறந்த வீரர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதனூடாக, தேசிய மட்டத்தில் டெனிஸ் விளையாட்டை வலிமைப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இலங்கையின் நிறுவனம் எனும் வகையில், ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதற்காக இது போன்ற விளையாட்டுகளுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. கல்வி அமைச்சு மற்றும் சுவதேஷி கொஹோம்ப Deo Fresh வர்த்தக நாமம் ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் பிணைப்பின் மூலமாக இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்த போட்டித்தொடரில் கல்வி அமைச்சின் சார்பில் இணைப்பு செயற்பாடுகளை ஜாலிய யசரட்ன மேற்கொண்டிருந்தார்.

இயற்கை அழகு பராமரிப்பு மற்றும் பிரத்தியேக பராமரிப்பு தயாரிப்புகள் உற்பத்தில் 1941 ஆம் ஆண்டு முதல் சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் முன்னோடியாக திகழ்கிறது. 

இதில் கொஹோம்ப, கொஹோம்ப பேபி, ராணி சந்தன சவர்க்காரம், அப்சரா, பேர்ள்வைட், சேஃவ்ப்ளஸ், லக் பார், லேடி, ப்ளாக் ரூடவ்கிள் (பேர்ஃபியும்கள் மற்றும் ஆப்டர்ஷேவ்), ஷவர் ஜெல் தயாரிப்புகள் போன்றன அடங்கியுள்ளதுடன், சிறுவர்களுக்கான தயாரிப்புகளாக லிட்டில் பிரின்சஸ் தயாரிப்புகளும் அடங்கியுள்ளன.

சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சியின் கொஹோம்ப மற்றும் ராணி சவர்க்காரங்கள் மூலிகை மற்றும் சந்தன அழகியல் சவர்க்கார தெரிவுகளில் சந்தை முன்னோடிகளாகத் திகழ்கின்றன.